காவலர் வீர வணக்க நாள் - விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட கோவை காவல்துறை

காவலர் வீர வணக்க நாள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாநகர காவல்துறை சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
காவலர் வீர வணக்க நாள் - விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட கோவை காவல்துறை
Published on

காவலர் வீர வணக்க நாள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாநகர காவல்துறை சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றி, பணியின் போது இறந்த காவலர்களின் வீரத்தினை நினைவூட்டும் வகையிலும், அவர்களின் தியாகங்களை நினைவு கூரும் வகையிலும் அக்டோபர் 21ஆம் தேதி ஆண்டுதோறும் வீர வணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, கடந்த 5ஆம் தேதி தெருக்கூத்து நடத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று காவலர்களின் சேவையை போற்றும் விதமாக வீடியோ வெளியிடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com