பார்வைற்றோர் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

கோவையில் அரசு பார்வையற்றோர் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர், போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
பார்வைற்றோர் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அரசு பார்வையற்றோர் சிறப்பு பள்ளியில், 4ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், உடல்நலம் பெறாத நிலையில், சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்செல்ல அவரது பெற்றோர் சென்றுள்ளனர். அப்போது, அதே பள்ளியில் பணிபுரியும் உதயகுமார் என்ற ஆசிரியர், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்ட நிலையில், புகார் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமிக்கு ஆசிரியர் உதயகுமார் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானதை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த, அனைத்து மகளிர் போலீஸார், அவரை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com