

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நகை அடகு நிறுவனத்தில் நகைகள் மாயமானதோடு கணக்கில் குளறுபடி இருந்தது தெரிய வந்தது. அடகு வைக்கப்பட்ட ஐந்தாயிரத்து 81 கிராம் தங்க நகைகளில், நான்காயிரத்து 650 கிராம் மட்டும் இருந்தது. ஆயிரத்து150 கிராம் நகைகள் மாயமாகி உள்ளது. இது குறித்த புகாரில், 46 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளரை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.