கோவை அரசு மருத்துவமனையில், முதல் முறையாக உறுப்பு தானம் பெற்ற சீறுநீரகத்தை, ஒருவருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். நீலகிரியை சேர்ந்த சிவபெருமாள், கட்டுமான பணிகளை செய்த போது, கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், கோவை மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அருண் குமார் என்பவருக்கு, தானமாக பெறப்பட்ட சிறுநீரகத்தை மருத்துவர்கள் இன்று வெற்றிகரமாக பொருத்தினர். முதல் முறையாக, கோவை அரசு மருத்துவமனையில், உறுப்பு தான சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளதாக, மருத்துவமனை டீன் அசோகன் தெரிவித்தார்.