அடகு கடையில் 800 சவரன் நகை கொள்ளை
கோவை ராமநாதபுரம் பகுதியில், பிரபல தனியார் அடகுக்கடை இயங்கி வருகிறது.நேற்று மாலை இந்த கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். முகமூடி அணிந்த படி வந்த அந்த நபர், கடைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த பெண் ஊழியர்களில் ஒருவரை பயங்கரமாக தாக்கி உள்ளார்.மற்றொரு பெண் ஊழியர் மீது மயக்க ஸ்பிரே அடித்த அவர், லாக்கரில் இருந்து 800 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். மேலும், கொள்ளையனை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கடைக்குள் நுழைந்த அந்த நபர் , அரை மணி நேரத்திற்குள், இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளதால், முன்னாள் ஊழியராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதுதொடர்பாக பெண் ஊழியர்களிடமும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன அடகு கடையில் பாதுகாவலர் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
