

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்ததால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மலர் சந்தையின் இரு புறமும் தகர சீட்டுகளால் மூடப்பட்டது. இதனையடுத்து, அதே சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான மலர் அங்காடி கட்டிடத்தில் சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பணிகளை செய்துவருகிறது.