காட்டு யானை "விநாயகன்" பிடிபட்டது - மயக்க மருந்து செலுத்தி பிடித்தது வனத்துறை
கோவை பெரிய தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்
இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, யானைகளை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை பெரிய தடாகம் அருகே விநாயகன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதை அடுத்து, மயக்கமடைந்தது. இதையடுத்து, யானையை கும்கிகள் உதவியுடன் வாகனத்தில் ஏற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு யானை சின்னதம்பியை பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
8 மணி நேரம் போராட்டத்திற்கு பின் பிடிபட்டது "விநாயகன்" யானை :
