பல மாதங்களாக போக்கு காட்டிய விநாயகன் - மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் தனிக்காட்டு ராஜாவாக சுற்றி வந்தது ஒரு காட்டு யானை.

இந்த நிலையில் தான் யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டம் தீட்டனர். இதற்காக யானையின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கிய வனத்துறையினர் அதிகாலை 6 மணிக்கு முதல் மயக்க ஊசியை செலுத்தினர். ஒரு மயக்க ஊசியானது 3 மணி நேரம் வரை மட்டுமே மயக்கத்தில் வைத்திருக்கும். இதற்காக வண்டியில் ஏற்றப்படும் வரை யானையின் மீது அடுத்தடுத்து 4 ஊசிகள் செலுத்தப்பட்டன.

முதல் ஊசி போட்டதுமே சற்று மிரண்டு போன யானை தன் சுயநினைவை இழந்த நிலையில் சோகமாகவே காணப்பட்டது. கண்களில் கண்ணீர் வழிந்த நிலையில் சோர்வாக காணப்பட்ட விநாயகனை கயிறுகள் கொண்டு கட்டினர். பின்னர் அதனை வாகனத்தில் ஏற்றும் முயற்சி நடந்தது.

இதற்காக விஜய், சேரன், பொம்மன் மற்றும் வாசிப் என 4 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு யானை வாகனத்தில் ஏற்றப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com