Coimbatore காதல் திருமணம் செய்த மகள் - போனில் வந்த தந்தை... புது ஜோடிகளை நடுங்க வைத்த வார்த்தை
காதல் திருமணம் செய்த மகள் - போனில் வந்த தந்தை... புது ஜோடிகளை நடுங்க வைத்த வார்த்தை
கோவையில் சாதி மாறி காதல் திருமணம் செய்த மகளை, பெற்ற தந்தையே, கழுத்தறுத்து கொன்றுவிடுவதாக மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பழனியாண்டி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் - செல்லம்மாளின் மகளான பவிப்பிரியா, பொள்ளாச்சி, கொண்டேகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவரை காதலித்த நிலையில், இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வேறொரு நபரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், பவிப்பிரியா, சேதுபதியின் பெற்றோர் சம்மதத்துடன்
திருமணம் செய்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த நிலையில், மகளின் தந்தை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது.
