Kovai | ஜோடி சேர்ந்து கோக்கு மாக்கு செய்த கோவை தம்பதி - கொக்கி போட்டு தூக்கிய ஆவடி போலீஸ்

ஜோடி சேர்ந்து கோக்கு மாக்கு செய்த கோவை தம்பதி

Kovai | ஜோடி சேர்ந்து கோக்கு மாக்கு செய்த கோவை தம்பதி - கொக்கி போட்டு தூக்கிய ஆவடி போலீஸ் #kovai #digitalarrestscam #avadipolice மும்பை சைபர் கிரைம் போலீசார் என கூறி, ஆவடியை சேர்ந்த நபரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த கோவையை சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆவடியை சேர்ந்த வைரவன் என்பவரை தொடர்பு கொண்ட அவர்கள், தங்களது வங்கி கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளனர். தாங்கள் கூறிய வங்கி கணக்கில் 60 லட்சம் ரூபாய் செலுத்தாவிட்டால் “டிஜிட்டல் அரெஸ்ட்செய்யப்படுவீர்கள் என மிரட்டியதாக தெரிகிறது இதனை நம்பி பணம் செலுத்திய வைரவன், பின்னர் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், கோவையில் பதுங்கி இருந்த செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சசீலாவை கைது செய்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com