கோவையில் சிறுவன் சிறுமி வன்கொடுமை கொலை வழக்கு : குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை
கோவையில் குழந்தைகளை கடத்தி கொன்ற மனோகரனை தூக்கிலிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவையில்10 வயது சிறுமி முஸ்தான் மற்றும் 7 வயது சிறுவன் ரித்திக் ஆகியோரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மனோகரனுக்கு கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் டிசம்பர் 2ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு, கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் மனுத் தாக்கல் செய்தார். அதில் ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் டீக்காராமன் ஆகியோர் அமர்வு மனோகரனை தூக்கிலிடும் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
