

கோவை மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் பூபதி, நகை மற்றும் பணம் கேட்டு தனது மனைவி சுதாவை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. சுதா தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் தனது மகள் சுதாவையும் அவரது மகளையும் பூபதி அடித்து துன்புறுத்துவதாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சுதாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.