மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய தந்தை : சிறைபிடித்த பொதுமக்கள் - மக்கள் மீது காரை ஏற்றிவிட்டு தப்பி செல்ல முயன்ற மகன்

கோவையில் காவல்துறையினர் கண்முன்னே , பாதிக்கப்பட்டவர்களை காரை வைத்து ஏற்றியவரை பொதுமக்கள் தாக்கியதால் இரு தரப்பினரிடையே பதற்றமான சூழல் நிலவியது.
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய தந்தை : சிறைபிடித்த பொதுமக்கள் - மக்கள் மீது காரை ஏற்றிவிட்டு தப்பி செல்ல முயன்ற மகன்
Published on
கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த கள்ளிப்பாளையம் பகுதியில் ரங்கசாமி என்பவரை இரு சக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த கோட்டைக்காடு பாபு என்பவர் மோதியதாக கூறப்படுகிறது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார். இதை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு பாபுவை சிறைவைத்து, மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த நிலையில், பாபுவை மீட்க அவரது மகன் ஹரி பிரசாத் அங்கு வந்துள்ளார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஹரி பிரசாத் ஓட்டி வந்த வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அப்போது தன் தந்தையை வாகனத்தில் ஏற்றிய ஹரி பிரசாத், வாகனத்தை சூழ்ந்திருந்தவர்களை பொருட்படுத்தாமல், அவர்கள் மீது காரை ஏற்றிவிட்டு தப்பி செல்ல முயன்றார். இதனால் அப்பகுதியில் சூழ்ந்த மக்களுக்கும், விபத்தை ஏற்படுத்தியவர்கள் தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com