ஆறு மாத காலமாக நடந்த செயல்.. பொறியியல் பட்டதாரி செய்த காரியம்.. அம்பலமான உண்மை.. | Thanthitv

கோவையில் ஆறு மாத காலமாக மருத்துவமனைகளுக்கு வெளியே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல் போவது தொடர்கதையாக தொடர்ந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கரூர் மாவட்டத்தை சேர்ந்த கௌதம் என்ற இளைஞர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இன்ஜினியரிங் படித்த கெளதம், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மேற்கொண்டு வருபவர் என்பதும் பொழுதுபோக்கிற்காக இப்படி அவர் மருத்துவமனைகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து திருடப்பட்ட 12 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com