

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர்கள் ரியாஷ் மற்றும் அர்ஷத், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இரு சக்கர வாகனத்தில் கேரளா சென்றுள்ளனர். பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியில் இரவு வேகமாக சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதி நிலைகுலைந்து விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு கேரள போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பலியான
இரண்டு பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு பின்பு கோவை கொண்டு வரப்பட்டது.