கோவையில் நிகழ்ந்த 3 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், செய்தியாளர்களை சந்தித்தார். மத வழிபாட்டு தலத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறிய அவர், மற்ற இரு சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில், யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.