உணவில் கரப்பான் பூச்சி - நடிகை ஆத்திரம்

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம்சாட்ட, அந்த கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். நடந்தது என்ன...?
உணவில் கரப்பான் பூச்சி - நடிகை ஆத்திரம்
Published on

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம்சாட்ட, அந்த கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். நடந்தது என்ன...? தற்போது பார்க்கலாம்...

ஒருநாள் கூத்து.. டிக் டிக் டிக்.. சங்கத்தமிழன் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்..

இவர் சென்னை கந்தன்சாவடியில் உள்ள தனியார் உணவகத்தில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால் அந்த உணவகம் அனுப்பிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த நிவேதா பெத்துராஜ், சமூக வலைதளத்தில் அதனை பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இரண்டாவது முறையாக இதுபோன்று கசப்பான நிகழ்வு அரங்கேறியுள்ளதாக நடிகை நிவேதா குற்றம்சாட்டினார்.

இந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட உணவகத்தில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவுத்தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இறைச்சிகள், முட்டைகளை தரம் குறித்து ஆராய்ந்த அதிகாரிகள், உணவு தயாரிக்கும் கூடம் சுகாதாரமாக இல்லை, உணவு பதப்படுத்தும் பெட்டிகள் தரமாக இல்லை எனக்கூறி உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர்

பின்னர் உணவு பொருட்களை பரிசோதனைக்காக கொண்டு சென்ற அதிகாரிகள், 3 நாட்களுக்குள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதுபோன்ற புகார்கள் அடிக்கடி வருவதால், அனைத்து உணவகங்களிலும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, உணவு தரத்தை ஆராய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com