``குழந்தை சாப்பிட்ட அங்கன்வாடி கொழுக்கட்டையில் கரப்பான்பூச்சி’’ மதுரையில் பரபரப்பு

x

Madurai | ``குழந்தை சாப்பிட்ட அங்கன்வாடி கொழுக்கட்டையில் கரப்பான்பூச்சி’’ மதுரையில் பரபரப்பு

மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன இந்நிலையில் இன்று காலை அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக தயாரிக்கப்படும் கொலுக்கட்டைகள் வழங்கப்பட்டுள்ளன இதனை உண்டு கொண்டிருந்தபோது திடீரென ஒரு கொலுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது

இதனை பார்த்த சிறுமி அவரது தாயாரிடம் கொலுக்கட்டையில் பூச்சி இருப்பதாக கூறிய போது அதனை பிரித்துப் பார்த்த தாயார் கொலுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி இருப்பது தெரிய வந்தது

இதனால் பதட்டமடைந்த சிறுவனின் தாயார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு மருத்துவர்கள் இல்லை என கூறியதால் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிய நிலையில் தற்போது சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்