இ- மெயிலில் பத்திரப்பதிவு ஆவணம் : துவக்கி வைத்தார் முதல்வர்

பத்திரப்பதிவு ஆவணங்களை, இ - மெயிலில் பெறும் புதிய வசதியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துவக்கி வைத்துள்ளார்.
இ- மெயிலில் பத்திரப்பதிவு ஆவணம் : துவக்கி வைத்தார் முதல்வர்
Published on
பத்திரப்பதிவு ஆவணங்களை, இ - மெயிலில் பெறும் புதிய வசதியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துவக்கி வைத்துள்ளார். சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதனை துவக்கி வைத்த எடப்பாடி பழனிச்சாமி, பத்திரப்பதிவு துறையில் ஸ்டார் டூ பாயின்ட் ஓ என்ற திட்டத்தின் கீழ், இ- மெயில் மூலம் பத்திர நகல்கள், பதிவு கட்டணம் செலுத்துதல் உள்ளிட்டவைகளை பெற முடியும் என தெரிவித்தார். இந்த முறையின் மூலம், சான்றிதழின் உண்மை தன்மையை எவரும் அறிந்து கொள்ள முடியும் என்றும் பதிவு விதிகள் படி, வழங்கப்படுவதால், உரிய சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com