"மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்" - முதலமைச்சர் பெருமிதம்

மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
"மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்" - முதலமைச்சர் பெருமிதம்
Published on

இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், ஆயிக்கணக்கான மருத்துவமனைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்த திட்டத்தின் கீழ் 107 நோய்களுக்கு சிகிச்சை பெறமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது என்றும், தமிழகத்தில் குழுந்தைகள் பிறப்பது மருத்துவமனைகளியே உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ தொழில் நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com