காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைந்த செய்தியறிந்து தான் மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார். பெருந்தொற்று காலத்திலும் தன் கடமையைச் சிறப்பாக ஆற்றிய ஈஸ்வரனின் மறைவு, தமிழ்நாடு காவல்துறைக்குப் பேரிழப்பு எனவும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், காவல்துறையினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com