cm meets mn rajam || surprise கொடுத்த முதல்வர் சந்தோசத்தில் திக்குமுக்காடி போன பழம்பெரும் நடிகை

நடிகை எம்.என்.ராஜம் பிறந்தநாள்- முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

பழம் பெரும் நடிகை எம்.என்.ராஜத்தின் 90-ஆவது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற எம்.என்.ராஜம், சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 90-வது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். அப்போது, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை தினத்தந்தி மூலமாக தெரிவித்திருந்தார். இதை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள நடிகை எம்.என்.ராஜம் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். முதல்வர் நேரில் வந்து வாழ்த்தியதை கண்டு, எம்.என்.ராஜமும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போயினர்

X

Thanthi TV
www.thanthitv.com