சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகையும், மாணவர்களின் கல்விக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கான காசோலைகளை விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கினார். வளையப்பந்து, சதுரங்க விளையாட்டு, ஹாக்கி என பல்வேறு போட்டிகளில் வெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 63 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.