சென்னை - ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வரவேற்பு இல்லக் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதுபோல், மதுரை மற்றும் தருமபுரியில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கான புதிய கட்டிடங்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.