முதலமைச்சர் தலைமையில் 2 வது நாளாக ஆட்சியர்கள் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2வது நாளாக ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் தலைமையில் 2 வது நாளாக ஆட்சியர்கள் ஆலோசனை
Published on
சென்னை தலைமை செயலகத்தில் ஆட்சியர்கள் தலைமையிலான 2 நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆலோசனை கூட்டத்தில் 16 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் இன்று 2வது நாளாக ஆட்சியர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 13 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டுள்ளனர். 15 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக உதகை மற்றும் கோவை ஆட்சியர்கள் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே தேர்தல் காரணமாக வேலூர் ஆட்சியர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com