கோவை : பார்வை குறைபாடு உள்ள மாணவனுக்கு மடிக்கணினி வழங்கி முதலமைச்சர் பாராட்டு

சென்னை தலைமை செயலகத்தில் பார்வை குறைப்பாடு உள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த சபரி வெங்கட் என்ற மாணவனுக்கு மடிக்கணினியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கோவை : பார்வை குறைபாடு உள்ள மாணவனுக்கு மடிக்கணினி வழங்கி முதலமைச்சர் பாராட்டு
Published on
சென்னை தலைமை செயலகத்தில் பார்வை குறைப்பாடு உள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த சபரி வெங்கட் என்ற மாணவனுக்கு மடிக்கணினியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சபரி வெங்கட். பிறவிலேயே பார்வை குறைபாடு இருக்கும் நிலையிலும், கட்டுரை, பேச்சு பேட்டிகளில் பங்கேற்று சிறப்பாக திறமையை காட்டி வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட மற்றும் மாநில அளவில் பல பதக்கம் வென்றுள்ள சபரிவெங்கட், ஜெயலலிதாவிடம் பரிசும் பெற்றுள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் கலாமிடமும் சான்றிதழ் பெற்றுள்ள மாணவன் சபரிவெங்கட் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை அழைத்து பாராட்டியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com