வெளிநாட்டு முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அனுமதிகளை துரிதப்படுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகார குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் துணை முதலமைச்சர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு ஒவ்வெரு மாதமும் முதல் வாரம் கூடி நிலுவையில் உள்ள அனுமதிகளுக்கு தீர்வு காணும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.