சாலை விபத்தில் துணிக்கடை உரிமையாளர் பரிதாப பலி-அதிர்ச்சிகர காட்சி
சாலை விபத்தில் துணிக்கடை உரிமையாளர் பரிதாப பலி-அதிர்ச்சிகர காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் துணிக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர் அருகே குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஷ், போச்சம்பள்ளியில் டெக்ஸ்டைல்ஸ் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் மத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, சாலையை கடக்க முயன்ற அவரை பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாதேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
