மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் விவகாரம் : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உதவுமாறு மீனவர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை.
மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் விவகாரம் : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு
Published on

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரி, மீனவர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய எடுத்த நடவடிக்கை குறித்த திட்ட அறிக்கையை வரும் 17ஆம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உதவுமாறு மீனவர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

X

Thanthi TV
www.thanthitv.com