வாகன தணிக்கையின் போது ஏற்பட்ட மோதல், காவலர் மீதான புகாரை வாங்க மறுப்பு என தகவல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை டிஎஸ்பி இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாகன தணிக்கையின் போது ஏற்பட்ட மோதல், காவலர் மீதான புகாரை வாங்க மறுப்பு என தகவல்
Published on
வாகன தணிக்கையின் போது சங்கரன் என்பவருக்கு​ம், காவலர் வேந்தன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கரனை காவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து சங்கரின் உறவினர்கள் டி.எஸ்.பியிடம் புகாரளிக்க சென்றனர். அங்கு, போலீசார் புகாரை வாங்க மறுப்பதாக கூறி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த டி.எஸ்.பி. விவேகானந்தன் உள்ளிட்ட போலீசார், அவர்களை அலுவலகத்திற்குள் இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com