ஜல்லிக்கட்டு போட்டியில் இரு தரப்பினரிடையே மோதல் - காவல்துறை தடியடி

x

மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் இருதரப்பினரிடையே இடையே மோதல் ஏற்பட்டதால் காவல்துறை தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரம் காளைகளும் 500 வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் காளை உரிமையாளர் தனது ஜல்லிக்கட்டு காளையை அடக்கிய வீரருடன் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்