பைக் நிறுத்துவதில் மோதல் அலுவலர் மீது வழக்கு பதிவு
பைக் நிறுத்துவதில் மோதல் -அலுவலர் மீது வழக்கு பதிவு
புவனகிரி பேரூராட்சியில் பைக் நிறுத்துவதில் மோதலில் ஈடுபட்ட அலுவலர்களை விசாரித்த போலீசார், இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்
கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சியில் தற்காலிக டெங்கு பணியாளரான மாயவேல் என்பவருக்கும், இளநிலை உதவியாளரான ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 25 ஆம் தேதி வண்டி நிறுத்துவதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாயவேல் தனது சகோதரர் மாதுவுடன் வந்து, தன்னையும், உடன் பணிபுரியும் தனுஷ்கோடி என்பவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, அலுவலக கதவு கண்ணாடிகளை உடைத்ததாக ராதாகிருஷ்ணன் காவல்துறையில் புகாரளித்தார்.
சிசிடிவி அடிப்படையில் புகாரை விசாரித்த காவல்துறையினர் மாயவேல் ,மாது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
