பலத்த பாதுகாப்போடு நடக்கும் தேர்வு | civil service exam

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் 4ஆயிரத்து 705 பேர் இந்த தேர்வினை எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில் 7 மையங்களில் சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வை 2 ஆயிரத்து 578 பேர் எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com