நாய்களை குப்பை வண்டியில் ஏற்றிய பேரூராட்சி நிர்வாகம் - வீடியோ வைரல்

x

சேலம் அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை பேரூராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில் ஏற்றி, ஊருக்கு ஒதுக்குபுறமாக இடத்தில் கொண்டு சென்று கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை பேரூராட்சி நிர்வாகம், சுருக்கு கம்பிகளால் பிடித்து குப்பை வண்டியில் ஏற்றி குப்பைகளை கொட்டுவது போல ஆத்துபாலம் அருகே கொட்டியுள்ளது.இது தொடர்பாக மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்