குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் : முதலமைச்சருக்கு சந்தேகம் வராதது ஏன்? - காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி

குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமிக்கு சந்தேகம் வராதது ஏன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பினார்.
குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் : முதலமைச்சருக்கு சந்தேகம் வராதது ஏன்? - காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி
Published on
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமிக்கு சந்தேகம் வராதது ஏன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பினார். சென்னை, திருவொற்றியூரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித்ஷா கொடுத்த வாக்குறுதிகளை நம்ப முடியாது என் கூறினார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், கேரளா முதலமைச்சர் , தெலுங்கானா முதலமைச்சர் ஆகியோருக்கெல்லாம் சந்தேகம் உள்ளதாகவும், ஆனால் தமிழக முதலமைச்ச எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் சந்தேகம் வராதது ஏன் என்றும் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பினார்.
X

Thanthi TV
www.thanthitv.com