சர்க்கஸ் ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் - போலீஸ் வலைவீச்சு
தஞ்சாவூர் அருகே சர்க்கஸ் அமைத்திருந்தவரின் ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், நத்தமேடு பகுதியை சேர்ந்த விஜய், ஊர் ஊராகச் சென்று ஒட்டகம், குதிரை மற்றும் நாய் உள்ளிட்டவற்றை வைத்து சர்க்கஸ் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடி பகுதியில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வந்தபோது, கடந்த 15ஆம் தேதி இரவு கூடாரத்திற்கு அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
