பள்ளிக்கல்வித் துறையின் சர்க்குலர் - பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு

x

சர்ச்சையான பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட திடீர் சர்க்குலர்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றார் போன்று, ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஆங்கில வழி வகுப்புகளை பொறுத்த வரை, ஒரு வகுப்பில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருந்தால், அவை ஒரு வகுப்பாக கணக்கிட்டு ஆசிரியர் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மாணவர்களுக்கு குறைவாக ஆங்கில வழி வகுப்பில் இருந்தால், அந்த மாணவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளில், அதே ஆங்கில வழி வகுப்பில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தமிழ் வழி வகுப்புகளாக இருந்தால் 35 அல்லது 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று உள்ளது.

இதனால், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்