

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏஜிஎஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பு, வினியோகம், மற்றும் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் ஆகியவற்றை செய்து வருகிறது. மேலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னையில் திரையரங்குகளும் உள்ளன. இந்த சூழலில் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராய நகரில் உள்ள கல்பாத்தி அகோரம் வீட்டில், 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.