

கடன் பிரச்சினை தொடர்பான வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தற்காக 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சினிமா பைனான்சியர் ககன் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தாமும் , மகனும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.