"கல்வி கடனிற்கு சிபில் ஸ்கோர்" - மத்திய அரசுக்கு கண்டனம்
கல்விக்கடனிற்கு மாணவர்களிடம் சிபில் ஸ்கோர் கேட்க கூடாது என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும், விதிகளில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது என எம்பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்ட அவர், தொடர்ந்து 7 ஆண்டுகளாக இந்த முகாம் நடத்தப்படுவதாகவும், இந்த ஆண்டு 200 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கல்விக்கடன் வட்டி 10.25 சதவீதமாக உள்ள நிலையில், மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
Next Story
