தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : வண்ண மின்விளக்குகளில் ஜொலித்த தேவாலயங்கள்

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது

திருச்சி, மதுரை, கோவை, உதகை , விழுப்புரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள தேவாலயங்கள் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. ஆயிரக்கணக்கானோர் மெழுகு வர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கோயிலில் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது .

சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

சென்னையில் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் கிருஸ்துமஸ் பண்டியையையொட்டி நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் ஏராளமானோர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பங்கேற்றனர். அப்போது ஒருவருக்கொருவர் கேக் வழங்கி கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

ஆடல் பாடலுடன் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை

X

Thanthi TV
www.thanthitv.com