குழந்தைகளின் பேவரைட் தின்பண்டத்தில் அதிர்ச்சி - பகீர் கிளப்பும் வீடியோ
குழந்தைக்கு வாங்கிய தின்பண்டத்தில் புழு இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். வேலூரை சேர்ந்த சுபா என்பவரின் கணவர், கோவையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்கி சென்றுள்ளார். வீட்டில் தின்பண்டத்தை உண்ட குழந்தைகள், அதில் புழு நெளிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தின்பண்டம் காலாவதியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சுபா புகாரளித்தார். கோவையில் வாங்கிய பொருள் என்பதால், அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரிவித்து விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
