சித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்
Published on
கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.இந்த ஆபூர்வ காட்சி உலகில் ஆபிரிக்கா நாட்டின்அடர்ந்த காட்டுபகுதியிலும், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும் மட்டுமே தெரியும்.இந்த அபூர்வ காட்சியை பார்க்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்,கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர்.மழை மேகங்கள் காரணமாக சூரியன் மறைவதை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியவில்லை.அதே வேளையில் முக்கடலில் இருந்து சந்திரன் உதயமாகும் காட்சியை சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com