5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சித்திரை திருவிழா! மகிழ்ச்சியில் மக்கள்
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள மகா மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா துவங்கியது. இக்கோவிலின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கோவில் கட்டப்பட்டு நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழா கம்பம் ஊன்றுதலுடன் துவங்கியது.இதில் சுற்றுவட்டார கிராமமக்கள் மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக பூத்தட்டுக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.
Next Story
