Madurai | Vaigai | ஆற்றில் இறங்க போகும் கள்ளழகர் | முழு வீச்சில் ரெடியாகும் வைகை
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 28-ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து 29-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதற்காக, புதிய இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட திருத்தேர் கட்டும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, அழகர் கோவில் திருவிழா வரும் திங்கள் கிழமை தொடங்குகிறது. மதுரை நோக்கி வரும் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி 30-ஆம் தேதியும், விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு மே 1-ஆம் தேதி அதிகாலை 5.45 மணிக்கும் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு, மண்டகப்படிகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
