சித்திரை திருவிழா - மாட்டு வண்டி எல்கை பந்தயம்

x

புதுக்கோட்டை அருகே ஸ்ரீ அழகம்மாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 24 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாட்டிற்கு 8 கிலோமீட்டர் தூரமும் சிறிய மாட்டிற்கு 6 கிலோ மீட்டர் தூரமும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது. போட்டியை சாலைகளின் இரு புறங்களிடமிருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்