ரெடியாகும் மதுரை- சித்திரை பெருவிழா -முன்னேற்பாடுகள் ஜரூர்

x

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரை பெருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பாக ‌மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே 8ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வில் 10 லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்க வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்