உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர்

x

சிதம்பரம் அருகே உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது பெட்ரோல் கேனுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில் உள்ள சவுடு மணல் குவாரியில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவு ஆழத்தில் சவுடு மணல் எடுப்பதாக ரமேஷ் என்பவர் அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். ஆனால், இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த ரமேஷ் மது போதையில், உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசார் ரமேஷிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.


Next Story

மேலும் செய்திகள்