வைரமுத்து பற்றி ட்வீட் போட்டு மீண்டும் பரபரப்பை கிளப்பிய சின்மயி
பாடலாசிரியர் வைரமுத்துவின் பெயரை கூறியவர் தாம் மட்டுமல்ல, 16 முதல் 17 பெண்கள் இருப்பதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தனக்கு கிடைத்த ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி எனவும், ஆனால் முக்கியமான ஒன்றை நினைவூட்ட விரும்புவதாக கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக, வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் குரல் முற்றிலும் மழுங்கடிக்கப்பட்டதால்
தாம் மிகுந்த வேதனையை அனுபவித்து வந்ததாக கூறியுள்ளார்.
மேலும் தாங்கள் அனைவரும் கேட்பது நியாயம் என்றும், தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி, கனவுகள் இது அனைத்து அழிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், தாம் உட்பட அனைத்து பெண்களுக்கு நீதி கிடைக்க விரும்புவதாகவும், அதற்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்
Next Story