மாமல்லபுரத்தில் சீன அதிபரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் : புராதன சின்னங்களை பார்த்து மகிழ்ந்தனர்

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு சீன அதிபரின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும், அதிகாரிகள் 10 பேர் நேற்று சுற்றுலா வந்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் சீன அதிபரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் : புராதன சின்னங்களை பார்த்து மகிழ்ந்தனர்
Published on
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு சீன அதிபரின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும், அதிகாரிகள் 10 பேர் நேற்று சுற்றுலா வந்துள்ளனர். சீன அதிபர் மாமல்லபுரம் வந்த போது பாதுகாப்பு பணியில் இருந்ததால் தங்களால் சரியாக மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க முடியவில்லை என்றும், அதனால் தற்போது சுற்றுலா வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அர்ச்சுணன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் , சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்த இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com